December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை – ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம், வெளிநாட்டு நாணயங்கள்

திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மாதந்தோறும் நடைபெறும் வழக்கப்படி ஆகஸ்ட் மாதத்திற்கும் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் சு. ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

 பக்தர்கள் அளித்த காணிக்கையாக
ரூ. 4 கோடி 7 லட்சத்து 14 ஆயிரத்து 233,  ஒரு கிலோ 5 கிராம் தங்கம்,
18.16 கிலோ வெள்ளி,
17.5 கிலோ பித்தளை,
3.07 கிலோ செம்பு,
7.5 கிலோ தகரம்,
வெளிநாட்டு நாணயத்தாள்கள் 1,218 உள்ளன என கணக்கெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் முத்துமாரியம்மாள், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.