December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து பணிகளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

தூத்துக்குடி மாநகராட்சி 44வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் மாநகராட்சி பகுதி முழுவதும் நடைபெறுகின்ற, பகுதிசபா கூட்டத்தில் பொதுமக்களின் அனைத்து கோாிக்கைகளையும் முழுமையாக கேட்டறிந்து அதை குறிப்பெடுத்து எந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆய்வு செய்து அனைத்து குறைகளையும் பாரபட்சமின்றி முழுமையாக மக்களுக்கு செயல்படுத்தப்படும்.

திமுக ஆட்சி வந்த பிறகுதான் மக்களுக்கான அனைத்து நல்லதிட்டங்களும் நன்மைகளும் கிடைக்கின்றன. எல்லா பணிகளையும் நல்லமுறையில் உங்களுக்கு செய்து கொடுக்கப்படும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், மூக்கையா, வட்டப்பிரதிநிதி ரஜினிமுருகன், வெற்றிராஜன், பாஸ்கா், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.