December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் கனகராஜ், பொன்னப்பன், கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், தலைமை ஆசிாியர் வள்ளியம்மாள், கலை இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சோமநாதன், ெபருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்துகொண்டனா்.