November 30, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் பதிவு முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள், உப்பளத் தொழிலாளர்கள், சலவை, தையல், கைவினை, ஓவியர் மண்பாண்டம், காலனி, தோல் பதனிடும் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள், சாலையோர வணிகர்கள், சமையல், உணவு விநியோக தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெற சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் 22.06.25 அன்று நடைபெற்றது.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள், உப்பளத் தொழிலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறுவதற்கு சிறப்பு முகாமினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஆனந்த பிரகாஷ் முன்னிலையில் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

முகாமில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பொருளாளரும் தொமுச கவுன்சில் செயலாளருமான சுசி ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் கோட் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணா தேவி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அதிர்ஷ்ட மணி, சரவணகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, வட்ட பிரதிநிதிகள் கார்த்திகேயன் பாஸ்கர், தகவல் தொழில் அணி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், மார்கின் ராபர்ட், சந்தன முனீஸ்வரன், சஞ்சய், உமா மகேஷ், ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கான பயன்கள்;

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி மற்றும் நியமனதாரர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை மற்றும் 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இம் முகாமில் சுமார் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 180 நபர்களுக்கு அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினராக பதவியேற்றம் செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மீதம் விடுபட்ட தொழிலாளர்கள் அடையாள அட்டை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் மேலும் ஒருநாள் (23.06.2025 திங்கள் கிழமை) நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.