December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி 49 வது வார்டில் கண்காணிப்பு கேமரா வசதிகளை திறந்து வைத்து பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பகுதியில் பொது மக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் மாமன்ற உறுப்பினர் வைதேகி ஆகியோர் கோரிக்கை வைத்ததையடுத்து,

இன்று அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சமத்துவ பொங்கல் விழா நலத்திட்ட உதவிகளை 300 பெண்கள் உட்பட ஏராளமானோருக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்

மகளிர்க்கான சிறப்பான ஆட்சி, நம்பர் ஒன் முதலமைச்சர்

விழாவில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்;

இப்பகுதியில் பொது மக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமரா வசதிகளை அமைக்க வேண்டும் என வட்டச் செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி ஆகியோர் முயற்சியால் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளோம். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

இந்திய ஒன்றியத்திலேயே சிறப்பான ஆட்சியை நடத்தி நம்பர் ஒன் முதலமைச்சராக கழகத் தலைவர் தளபதியார் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக தாய்மார்களின் நலன் காக்கும் அரசாக திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மகளிர் நலன் காக்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

உப்பளத் தொழிலாளர்களின் நலன் காக்கும் திமுக அரசு

மேலும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து உப்பளத் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மழைக்காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5000 நமது முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல என்னற்ற திட்டங்களை தொழிலாளர்களுக்கும், மகளிர்களுக்கும் வழங்கிவரும் நமது முதலமைச்சரின் கரங்களை எப்பொழுதும் போல் நீங்கள் ஆதரவு தந்து வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பிரையன்ட் நகர் பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ். ரமேஷ், வட்டச் செயலாளர்கள் மூக்கையா, நவநீதன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணக்குமார், சுப்புலட்சுமி, மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பெனிட்டஸ், வட்ட அவைத் தலைவர் பெரியசாமி, பிரையன்ட் நகர் பகுதி பிரதிநிதி கோபால், வட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், வட்ட பிரதிநிதிகள் பாபு, அய்யாதுரை, குமார், பாஸ்கர், ரஜினி முருகன், முத்து, சிம்பு சிவா, மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

.