தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்ட மீன் ஏல கூடம், மீன் வலை பின்னல் கூடம், சோலார் மின் கம்பங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகரம் இனிகோ நகர் கடற்கரையில், என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் மீன் ஏல கூடம், மீன் வலை பின்னல் கூடம், 20 சூரிய ஒளி மின்விளக்குகள் ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், தூத்துக்குடி என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் இன் முதன்மை செயல் அலுவலர் அனந்த ராமானுஜம் முன்னிலையில் திறந்து வைத்தார்.
உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன் மற்றும் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் , மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் என்எல்சி நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சாலை அமைப்பு, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
முன்னதாக தூத்துக்குடி 51வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையான சாலை வசதி அமைத்துத் தருவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து 13வது வார்டு குறிஞ்சிநகர் பகுதியில் நடைபெற்ற கழிவுநீர் கால்வாய் அமைத்திடும் போது சில இடங்களில் இணைப்புகளை மூடாமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டச் செயலாளர் செல்வராஜ், பகுதி பிரதிநிதி அய்யப்பன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணியைச் சேர்ந்த ரகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
.

