December 1, 2025
#தூத்துக்குடி

கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன், மக்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்

CN. அண்ணாதுரை

தூத்துக்குடியில் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சமூகப் பொறுப்பு நிதி திட்டம் சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகரம் 49 வது வார்டு ராஜபாண்டி நகர் பாலம் பகுதியில் உள்ள ஸ்காட் திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் கண்புரை சிகிச்சை, கண் கண்ணாடி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அது தொடர்பான மருந்துகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து கண் பரிசோதனை செய்து கொண்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் கண் கண்ணாடிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் என்டிபிஎல் தலைமை செயல் அலுவலர் அனந்த ராமானுஜம், கூடுதல் பொது மேலாளர் (‌எச்.ஆர்) சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர்கள் ரகுபதி, சங்கர், அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அனிதா, மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி, வட்ட பிரதிநிதிகள் பாபு, பாஸ்கர் மற்றும் அவைத் தலைவர் பெரியசாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.