தூத்துக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முதலமைச்சரின் விாிவான மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து,
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவில் ஏ.வி.எஸ் தொடக்கப்பள்ளியில் இப் பகுதி மக்களுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் 27.04.25 இன்று நடைபெற்றது. முகாமினை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன்; 
காப்பீடு அட்டை பதிவு செய்ய வரும் போது பொதுமக்கள் குடும்ப அட்டை நகல், குடும்ப உறுப்பினர்களின் ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச்சான்றிதழ் ஆகியவற்றை சமா்பிக்க வேண்டும். மேலும் அதற்குறிய அசல் ஆவணங்களையும் ஆய்வு செய்ய கொண்டு வரவேண்டும் முதலமைச்சரின் விாிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் படி ரூ 120000க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் ஓரு ஆண்டிற்கு ரூ 5 லட்சம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை பெறலாம். மேலும் கைம்பெண்கள் ஆதரவற்றோா், வயது முதிா்வு ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு காப்பீடு அட்டை பதிவு செய்ய வருமான வரம்பு இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியை சோ்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
பின்னர் முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு உடனடியாக மருத்துவ காப்பீடு பதிவு சான்றுகளை அமைச்சர் வழங்கினார். இம் முகாமில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று முகாம் 28.04.25 திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பால குருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வட்டச் செயலாளர் நடேசன் டேனியல், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ராஜதுரை, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், சந்தன முனீஸ்வரன், சுரேஷ்குமாா், சஞ்சய், விளையாட்டு மேம்பாட்டு அணி சிராஜீதீன், வாா்டு நிா்வாகிகள் கல்யாணசுந்தரம், தங்கசேகா், மனோகரன், தமிழ்செல்வி, முத்துராஜ், பகுதி மகளிரணி வளர்மதி, வட்டப் பிரதிநிதி பாஸ்கா், கிராமநிர்வாக அலுவலா்கள் பிரேமலதா, செந்தில்குமாா், திருவரங்க செல்வி, மாணிக்க ராஜ், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

