December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனைகள் வழங்கினார்

By,CN. அண்ணாதுரை
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனைகள் வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் இறப்பு நீக்குதல் குறித்த முகாம் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் நமது நிர்வாகிகள் பங்கேற்று விழிப்புடன் செயல்படவேண்டும், வருகின்ற 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கிளைக் கழகங்கள் தொடங்கி ஒன்றியம் நகரப் பகுதிகளில் சிறப்பான முறையில் களப் பணிகளை செய்து கோவில்பட்டி தொகுயில் நாம் அதிகமாக வாக்குகளை பெறும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளரும் மாநில விவசாய அணி இணை செயலாளருமான கணேசன், கயத்தாறு கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கழுகுமலை சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர் மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.