December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மல்லிகா வரவேற்புரையாற்றினார்,

முகாமில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்;
இந்த வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி ஆண்டுக்கு இரண்டு முறை பெரிய நிறுவனங்கள் எல்லாம் அழைத்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் என்று தமிழக முழுவதுமே அத்தனை மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது இவ்வாறு தனியார் வேலைக்கு ஆள் தேவைப்படுவோர் ஒரு பக்கம், வேலை தேடுபவர் ஒரு பக்கம் என்ற இரண்டு பேரையும் இணைக்கும் பாலமாக இந்த முகாம்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துவருகிறது.
தற்போதைய வேலைவாய்ப்பு முகாமில் 143 தனியார்துறை நிறுவனங்களும், 10 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து மேற்பட்ட 5000க்கும் கொண்டு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்தி சேர இயலாத ஏழை எளிய இளைஞர்கள், இளம்பெண்களின் அரசுப்பணி கனவை நனவாக்கும் வகையில், அவர்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஒளிப்பரப்பும் திட்டத்தை நமது தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியானது கல்வித்தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரையும் மற்றும் மறுஒளிபரப்பு இரவு 07.00 மணிமுதல் 09.00 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இளைஞர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர், இவர்களது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் தொடந்து அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்ஒரு பகுதியாக, இன்றைய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 96 வேலையளிக்கும் நிறுவனங்கள் வந்திருக்கிறார்கள். இதில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நீங்கள் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் போது உங்கள் உழைப்பை அங்கிகரித்து உயர் பதவி வழங்குவார்கள். ஆகவே எந்த வேலை கிடைத்தாலும் அதில் சேர்ந்து உண்மையாக உழைக்க வேண்டும். நம்மை படிக்க வைத்த பெற்றோர்களுக்கும் குடும்பத்திற்கும் உதவிகரமாக இருக்கணும்னு எல்லா தம்பி தங்கைகளும் முடிவு செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை துவக்கி பெண்களை தொழில் முனைவோர்களாக முன்னேற்றுவதற்கு அதிக முயற்சி எடுத்திருக்கிறார்கள். பெண்கள் துணிந்து வேலையில் சேர்ந்தால் உங்கள் குடும்பத்திற்கு உபயோகமா இருக்கும், உங்கள் குடும்ப நலம்பெறும் போது தமிழ்நாடும் நலம் பெறும் என்று வாழ்த்தி இந்த பணி ஆணையை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் விக்னேஸ்வரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார். தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பிரதிநிதி பாஸ்கர் மற்றும் பல்வேறு தனியார் நிறுவன அதிகாரிகள், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.