தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் பங்களிப்போடு நடைபெற்ற மெகா இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து ஏராளமானவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற சமயத்தில் அப்பகுதியைச் சார்ந்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் எங்களது பெற்றோர்களால் மிதிவண்டி வாங்கி தர இயலவில்லை என்றும் தாங்கள் எங்களுக்கு மிதிவண்டி வாங்கி தாருங்கள் என கொஞ்சும் குரலில் பள்ளிக் குழந்தைகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைக் கருணையோடு கேட்டு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கீதாஜீவன் உடனடியாக பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை தனது உதவியாளர் மூலம் பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முகாமின் போது கோரிக்கை வைத்த ஏழை எளிய குழந்தைகளுக்கு பல வண்ண மாடல்களில் மிதிவண்டிகளை வாங்கி கோரிக்கை வைத்த அனைத்து குழந்தைகளையும் 26.05.25 அன்று வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கத்தில் வைத்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள்களை வழங்கி மகிழ்ந்தார்.
ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு அதனை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தனது சொந்த பணத்தில் கோரிக்கை வைத்த 7 குழந்தைகளுக்கும் உயர்ரக மிதிவண்டிகள் வழங்கி அமைச்சர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனைப் பெற்றோர்கள் மிகவும் மன மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு அமைச்சர் கீதாஜீவனை மனதார வாழ்த்தினர். தங்களது குழந்தைகளுக்கு எங்களது குடும்ப சூழ்நிலை காரணமான குழந்தை ஆசைப்பட்ட மிதிவண்டி வாங்கி கொடுக்க இயலாத நிலையில் அமைச்சர் கீதாஜீவன் தாயுள்ளத்தோடு செய்த உதவிக்கு மிக்க நன்றி என தெரிவித்தனர்.
முன்னதாக மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள், அமைச்சர் கீதாஜீவன் அவஞ தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா பூக்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ஐ.ரவி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர் சிங்கராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, இளைஞர் அணி சரவணகுமார், சிவபாலன் , மகளிர் அணி வளர்மதி, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி ஆல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.


