தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் வைத்து 18.06.25 இன்று மாலை தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தலைமை நிர்வாகி நீதியரசர் ஜோதிமணி, தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், முன்னாள் மாவட்ட நீதிபதி ரெத்னராஜ், நிதி ஆலோசகர் அன்பர் தாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் டாக்டர் டி.ஏ. பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவில் டாக்டர் வி.ராமா நன்றியுரை நிகழ்த்தினார்.

