| தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். |
தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் வசிக்கும் “அன்புகரங்கள்” இல்லத்தில் உள்ள 200 பேருக்காக தனியார் ஹோட்டலில் அறுசுவை விருந்தும், இனிப்பும், புத்தாடைகளும் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தார்.அமைச்சர் கீதாஜீவன். அவர்களே அவர்களோடு அமர்ந்து உணவருந்தி, நலம் விசாரித்து, பின்னர் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றும் கீதாஜீவன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் எங்கள் இல்லத்துக்கு வந்து உதவி செய்து மகிழ்ச்சி அளிக்கிறார். இந்த ஆண்டு கடற்கரைக்கு அழைத்து வந்து எங்களோடு உணவருந்தியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் எஸ்.டி.ஆர். பொன்சீலன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அனுசியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

