தூத்துக்குடி,
ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 15,516 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமாக தமிழ்நாடு திரும்பியுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை, சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சால்வை கொடுத்து வரவேற்றார்.

