| தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிாிழந்த இருவர் என 15 பேரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் காவல்துறையினா் 13 பேரை சுட்டுக் கொன்றது மட்டுமின்றி அந்த குடும்பங்களுக்கு முறையாக அரசு வேலை வழங்காத நிலையில் திமுக ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவா்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை முறையாக வழங்கி இன்று வரை துணையாக இருந்து வருகிறாா். தூத்துக்குடி மண்ணுக்கும் மக்களுக்கும் அரனாக விளங்கும்திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, துணைமேயர் ஜெனிட்டா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அபிராமி நாதன், இலக்கிய அணி சரத் பாலா, வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, மகளிரணி கவிதா தேவி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் நிா்மல்ராஜ், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, கல்யாணசுந்தரம், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பழனி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர அணி அமைப்பாளர்கள் அயலக அணி வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, வினோத், ரவி, மகேஸ்வரன்சிங், கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கி ராஜா, சரவணக்குமார், கந்தசாமி, தெய்வேந்திரன், பட்சிராஜ், விஜயகுமாா், பாப்பாத்தி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், வட்ட செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, சிங்கராஜ், பாலகுருசாமி, கங்கா ராஜேஷ், சுரேஷ் மகாராஜா, மனோ, சதீஷ்குமாா், அசோக்குமாா், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, சந்தன முனீஸ்வரன், குமார் வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், ஜேசு, பகுதி துணை செயலாளர் ரேவதி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்… |
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் 7ம் ஆண்டு அஞ்சலி செலுத்தினார்

