December 1, 2025
#தூத்துக்குடி

நலம் காக்கும் ஸ்டாலின்  முகாமில் அமைச்சர் கீதாஜீவன், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 02.08.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த உயர் மருத்துவ சேவைகளை பொதுமக்கள் ஓரிடத்தில் பெற்று பயனடையும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இரண்டாவது வாரமாக 09.08.2025 அன்று தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

             சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் முகாமை பார்வையிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மின் இதய வரைபடம். எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை வசதிகள், ரத்தப் பரிசோதனைகள், இருதயம், நரம்பியல், நுரையீரல், எலும்பியல் மற்றும் தோல் மருத்துவம், பல், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சிறப்பு அரசு மருத்துவர்களால் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்குண்டான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் முகாமில் மாநகராட்சி ஆணையர் பனோத் ம்ருகேந்தர் லால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவக்குமார், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி, மாநகர நல அலுவலர் சரோஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் 

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், ரவீந்திரன், வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, சேகர், முனியசாமி, சதீஷ், மனோ, மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், நாகேஸ்வரி, ஜெயசீலி, வைதேகி, பவானி, சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணா தேவி, நாகராஜன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, பகுதி துணைச் செயலாளர் ரேவதி, பகுதி பிரதிநிதி தயாள சுந்தர், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அஸ்வின், சந்தனம், சஞ்சய், முருக பெருமாள், ஜோயேல், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கம் மாநில தலைவர் மருதப் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.