தூத்துக்குடி:உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவரணி சார்பில் முத்துநகர் கடற்கரையில் மாபெரும் படகு போட்டி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் இந்தப் போட்டிக்கு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
போட்டியில் மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், தமிழ்நாடு மீனவர் நலவாரிய அமைப்பாளர் மற்றும் வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளரான அந்தோணி ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, வட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
படகு போட்டியில் முதல் இடத்தை ராஜ், இரண்டாம் இடத்தை விஜயன், மூன்றாம் இடத்தை ராஜேஷ் ஆகியோர் வென்றனர். வெற்றியாளர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டுகளை தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அத்துடன், நலத்திட்ட உதவி வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி வருகிற 21.11.2025 அன்று நடைபெறும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

