தூத்துக்குடி மாவட்டத்தில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளை உடமைகளை இழந்து பரிதவித்தனர். இந்த வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கியிருந்து வெள்ள நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதனால் மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் வீடுகளை முற்றிலும் இழந்து தவித்த மக்களுக்கு வீடுகளை கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்த அமைச்சர் கீதாஜீவன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் கீதாஜீவன்;
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 49- வது வார்டு ராஜபாண்டி நகர் மற்றும் கருணாநிதி நகரில் மழை வெள்ளத்தால் முழுவதும் வீடுகளை இழந்த மக்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஏற்பாட்டில், ஜே.எஸ்.டபுள்யு நிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியுடன் முதல்கட்டமாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் கட்டும் பணிகளை 23.01.25 அன்று அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி வீடு கட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இந்த கட்டுமானப்பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க வலியுறுத்தி வந்த நிலையில், ராஜபாண்டி நகரில் 8 வீடுகள் – கருணாநிதி நகரில் 2 வீடுகள் என புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளை அமைச்சர் கீதாஜீவன் 19.05.25 அன்று திறந்து வைத்து, ஜே.எஸ்.டபுள்யு மேலாளர் ராமராஜ் முன்னிலையில் பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஜே.எஸ்.டபுள்யு அலுவலர் சந்திரமோகன், வட்ட செயலாளர் மூக்கையா, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பிரையன்ட் நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, வட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், அய்யாசாமி மற்றும் 49 வது வட்ட திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

