December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி ஆத்தூரில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுது.

இந்த நிலையில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற , அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 26.08.25 இன்று சென்னை மயிலாப்பூர் அரசு உதவி பெரும் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். 

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு உதவி பெரும் சண்முகசுந்தர நாடார் துவக்க பள்ளியில், பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், காலை உணவு திட்ட மாவட்ட அலுவலர் கனகராஜ், உதவி திட்ட அலுவலர் வெள்ளபாண்டி, ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, முதலமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மேலும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் பால சுந்தரம், திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார். முன்னாள் யூனியன் சேர்மனும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜனகர். ஆத்தூர் நகர திமுக செயலாளர் முருகானந்தம், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, சிற்பி ஸ்ரீதர், சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித் சிங், புன்னைக்காயல் முன்னாள் பஞ். தலைவர் சோபியா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப் பாளர் லிங்கராஜ், ஒன்றிய அமைப்பாளர் மாரிமுத்து, துணைச் செயலாளர் ஜெயக்கொடி ஆத்தூர் இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார், நிர்வாகிகள் விமல், சிவபெருமாள் உட்பட ஆசிரியர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.