December 1, 2025
#தூத்துக்குடி

நகரை சீர்செய்யும் மேயர் ஜெகனின் தீவிர நடவடிக்கை: பாதாள சாக்கடை பணிகளில் நேரடி கண்காணிப்பு!”

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முந்தைய ஆண்டு மழை வெள்ளத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக குழாய்கள் இணைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதியதாக கழிவுநீர் பாதை பணிகள் நிறைவுற்ற கிருபை நகர், அசோக் நகர், பி&டி காலனி, கதிர்வேல் நகர், பால்பாண்டி நகர் மற்றும் நிகிலேசன் நகர் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரானது மின் மோட்டார்கள் மூலம் இருதயம்மாள்புரம் பகுதியில் உள்ள பிரதான கழிவுநீர் உந்து நிலையத்திற்கும், பின்னர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கழிவுநீர் சுத்திகரிப்படுகின்றது. இதற்காக பாதாள சாக்கடை குழாய்களை அம்பேத்கார் நகர் பகுதியில் இணைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வான்மதி, மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் ஜோஸ்பர் மற்றும் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.