தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பருவ மழைக்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
- அதிமுக கொறடா மந்திர மூர்த்தி பேசுகையில் ;
குடிநீர் இணைப்பு வைய்ப்புத் தொகையை மாநகராட்சி உயர்த்தி உள்ளதாகவும், ஏற்கனவே சொத்து வரி உயர்ந்துள்ள நிலையில் குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை உயர்த்துவது சரியல்ல என கூறினார். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி;

தூத்துக்குடி மாநகர பகுதியில் தற்போது வரை 1,52,382 வீடுகள் இருந்து வருகின்றன. இதில் தற்போது வரை 90,736 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குடிநீர் வீட்டு இணைப்பிற்க்கும் ரூ. 10,000 வைப்புத் தொகையாக பெறப்பட்டு வந்த நிலையில், மாநகர பகுதியில் புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் பெருமளவில் பெருகி வருகிறது. இவர்களது குடிநீர் தேவைகளை சரி செய்யும் வகையிலும், குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்ப்படாத வகையில் டெப்பாசிட் தொகையை குறைத்துள்ளோம், அடுக்கு மாடி வீடுகளில் 2 முதல் நான்கு வரை உள்ள குடியிருப்புகளுக்கு வைப்புத் தொகை தலா ரூ.7500ம், ஐந்து முதல் எட்டு வரையுள்ள குடியிருப்புகளுக்கு ரூ.6000மும் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள வீடுகளுக்கு தலா ரூபாய் 5000ம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
மேலும் மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகளை முழுமையாக மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் மழைநீர் தேங்க கூடிய இடங்களை அதிகாரிகள் குழு கண்காணிக்க வலியுறுத்தி உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தனது வார்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் திமுக கவுன்சிலர் இசக்கி ராஜா, ஜெயசீலி, பவானி மார்ஷல் ஆகியோர் தங்களது வார்டின் தேவைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, துணை ஆணையர் ராஜாராம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன், மாநகர துணை பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் வெங்கடேசன், சுரேஷ் குமார் கல்யாண சுந்தரம், நகர் நல அலுவலர் வினோத் ராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
