December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரில் டர்ஃப் மைதானம், மிதக்கும் நீருற்று, நவீன நீச்சல் குளம், முதியோர் பூங்கா அமைக்க மேயர் ஜெகன் உறுதி

தூத்துக்குடி மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்குமண்டலத்தில் 20.08.25 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர்.மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்றார்.முகாமில் கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள். 

முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். அதை முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் கடந்த 14 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து முகாம்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 723ல் 694 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 29 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்ற பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. உடனடியாக தீர்வு கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனா். ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் மாநகர பகுதிகளில் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் 13 துறைகளின் கீழ் 43 சேவைகள் மனுக்கள் மூலம் தீர்வு கானும் வகையில் கிழக்கு மண்டலத்தில் 255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 34 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. மற்ற மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பின் அதற்கான தீர்வு காணப்படும்.. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 3 வருடத்தில் மாநகராட்சி நல்லமுறையில் வளர்ச்சி பாதையில் செயல்படுகிறது. வரும் காலங்களில் மேலும் பல திட்டங்களில் மூலம் வளர்ச்சியடைய உள்ளது. உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் முத்துநகா் கடற்கரையில் வருகிறது. இளைஞர்கள் மீனவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அது உருவாக்கப்படவுள்ளது. வஉசி கல்லூாி முன்பு டர்ஃப் மைதானம் திறக்கப்பட்டுள்ளதற்கு மக்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்று அனைத்து மண்டலங்களிலும் மைதானம் அமைக்கப்படவுள்ளன. கடற்கரை சாலையில் 8 கி.மீட்டர் ஹெல்த் வாக் சாலையாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தாா். அந்த சாலையில் ஓரு பகுதியில் மட்டும் நடைபயிற்சி மேடை இருந்து வருகிறது. அதுபோன்று இன்னொரு பகுதியிலும் அமைக்கப்படும். தை பொங்கலுக்குள் இப் பணிகள் முடிவுபெறும். டபிள்யுஜிசி ரோட்டில் பேவா்பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முத்துநகா் கடற்கரையிலிருந்து செயின்ட் மேரிஸ் கல்லூரி வரை இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படவுள்ளன மேலும் தெப்பக்குளத்தில் விரைவில் நவீன வசதிகளை உருவாக்கி கிரனைட் கற்கள் பதிக்கப்பட்டு மிதக்கும் நீரூற்று அமைக்கப்படவுள்ளது. அதே போல் முதியோர்களுக்காக பூங்கா 2ம் கேட் உள்பட பல பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள் நலனும், ஆரோக்கியமும் மாசு இல்லாத மாநகரமும் உருவாக வேண்டும். அதற்கேற்றாற்போல் தான் மாநகராட்சி நிா்வாகம் பணியாற்றி வருகிறது. அடுத்த மாதம் மழைகாலம் தொடங்கி விடும் கடந்த காலத்தில் ஏற்பட்டதை போல் பாதிப்பு வராத நிலையில் 11 இடங்களில் மழைநீர் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் மழைநீர் கடல் பகுதிக்கு சென்று விடும். அனைவரும் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லா பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெறும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். பின்னா் பிறப்பு இறப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு 5 பேருக்கு ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினாார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் சரவணக்குமாா், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற் பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மாியகீதா, எடின்டா, தனலட்சுமி, ராமு அம்மாள், மும்தாஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், திமுக வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்பட பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.