தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த சாலைகள், மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
மாநகராட்சியாக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, வி.இ. ரோட்டிலிருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நேரில் பார்வையிட்டு, ஆவணங்களை ஆய்வு செய்தார். அதில், அந்த இடங்கள் சாலையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
| பின்னர் மாநகராட்சி நகர அமைப்பு உதவி செயற்பொறியாளர் காந்திமதி, முனீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று,
◊ ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் 1-வது தெருவுக்குச் செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு, ◊ரத்னா காலனியில் இருந்து மற்றொரு சண்முகபுரம் சாலையில் ஹாலோ பிளாக் கல் மூலம் எழுப்பப்பட்ட சுவர், ◊ வி.இ.ரோட்டிலிருந்து சண்முகபுரத்துக்கு செல்லும் மற்றொரு சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு — ஆகிய மூன்றையும் ஒரே நாளில் இடித்து அகற்றினர். |
.
40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த சாலைகள், மேயர் ஜெகன் பார்வையிட்ட 12 மணி நேரத்திற்குள் சீரமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து, மேயரை பாராட்டினார்கள்.

