தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க களஆய்வு மேற்கொண்டார் மேயர்
_________________________________________________________
கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது . அதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது,அந்த மழைநீரை மிக விரைவில் வெளியேற்றி ஒரிரு நாட்களில் மக்களை சகஜ நிலைக்கு மீட்டெடுத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.. என்று மக்களால் பாராட்டு பெற்றவர்.
அந்த வகையில் வரும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.
முதற்கட்ட பணியாக மழைநீர் நீர் அதிகமாக தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சிக்கு சொந்தமான 76 மின் மோட்டார்கள் மற்றும் மாநகராட்சிக்கு புதிதாக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள சிறிய வகை ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திரத்தையும், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, ஆணையர் மதுபாலன் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் கூறுகையில்; வடகிழக்கு பருவமழை தூங்குவதற்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சிகுட்பட்ட நான்கு மண்டலங்களின் பகுதிகளிலும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடை மற்றும் உப்பாற்று ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுபோல குடியிருப்பு பகுதி வடிகால்களை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்வதற்கு வசதியாக பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக பருவமழை தூங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக மழைநீர் வெளியேற்றும் 76 மின் மோட்டார்கள் மாநகர அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார்களை ஆய்வு செய்துள்ளோம். இவைகள் ஒரு சில நாட்களில் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், ரிக்டா ஆர்தர், முன்னால் கவுன்சிலர் ரவீந்திரன், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயர் உதவியாளர் ரமேஷ், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

