by,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள மழை நீர் வடிகால்களில் தடையின்றி நீர் சென்று முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் பகுதிகளில் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, பல்வேறு ஓடைகள் நீர்வழிப் பாதைகள் வடிகால்களின் கரைகளை பலப்படுத்தி தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் மதுபாலன் ஆகியோர் விரைந்து செய்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற வடிகால்களின் வழியாக செல்லும் மழை நீர் தடையின்றி சென்று முகத்துவாரங்களை கடந்து கடலில் கலப்பதற்கு ஏதுவாக திரேஸ்புரம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் உள்ள முகத்துவாரங்கள் தூர்வாரும் பணிகளையும், கருத்த பாலம் பகுதியில் உள்ள ஓடையை தூர் வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி 15.10.24 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல தலைவரும் திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளருமான தொ.நிர்மல்ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவரும் , சண்முகபுரம் பகுதி செயலாளருமான சுரேஷ் குமார், மாநகர திமுக மீனவர் அணி அமைப்பாளர் டேணி, வட்ட பிரதிநிதி மார்சல், மேயரின் உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

