December 1, 2025
#தூத்துக்குடி

மழைக்காலங்களில் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது – மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தாா். மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினார்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்; தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்று தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

வரும் மழைக்காலத்தில் மழை நீர் தேங்காத வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது – மேயர் ஜெகன் பெரியசாமி

◊.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இதுவரை 2700 சாலைகள் போடப்பட்டுள்ளன, அதேபோல் இந்த ஆண்டுக்கு 997 சாலைகள் போடும் பணி தொடங்கியுள்ளது, மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகள் அனைத்தும் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வருகின்ற மழைக்காலங்களில் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்காதநிலையை ஏற்படுத்தி உள்ளோம்.

மேலும் மாநகராட்சி சொந்தமான இடங்கள் அனைத்தும் வரன்முறை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன்படி பொது உபயோக இடம், ஆக்கிரமிப்பு, நீர் நிலை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க புதிதாக நிலம் வாங்கும் மக்கள் விழிப்புணர்வோடு மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.

முன்னதாக 49 வார்டு மூன்று செண்டு பகுதியில் முறையாக குடி தண்ணீர் வரவில்லை என மேயரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்ட நடவடிக்கை தொடர்ந்து இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாக மாமன்ற உறுப்பினர் வைதேகி, மேயர் மற்றும் ஆணையருக்கு சால்வை அணிவித்து பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை ஆணையர் சரவணகுமார், துணை பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், வைதேகி, சரவணக்குமார், பச்சிராஜ், முத்துவேல், முத்துமாரி, ராஜதுரை, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி.என்.ரவீந்திரன், வட்டச் செயலாளர் பிரசாந்த் மற்றும் தெற்கு மண்டல அனைத்து பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.