தூத்துக்குடியில் தந்தை பெரியார் 146வது பிறந்தநாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலையில் திமுக செயற்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து சமுகநீதி உறுதிமொழியான
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன் சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்! சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

என்று மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உறுதிமொழியை வாசிக்க, மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், இ.ராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அன்பழகன், குபேர் இளம்பரிதி, துணை அமைப்பாளர்கள் நாகராஜன், ராமர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, அண்ணாதுரை, துணை அமைப்பாளர்கள் ரவி, சத்யா, மகேஸ்வரன்சிங், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், சிறுபான்மை அணி துணைத் தலைவர் செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், சதீஷ்குமார், சுப்பையா, பாலகுருசாமி, கருப்பசாமி, சுரேஷ், பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், கதிரேசன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வரி, கந்தசாமி, பவானி மார்ஷல், பொன்னப்பன், தெய்வேந்திரன், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், கதிரேசன், அருணகிரி, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து மற்றும் பிரபாகர், லிங்கராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

