தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;
;தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது, தெற்கு மண்டலத்தில் இன்று நடைபெறுகிறது.
இதுவரை 3000க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மண்டலத்தில் மட்டும் 582 மனுக்கள் வரப்பெற்று 501 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 81மனுக்களில் சாலை கால்வாய் கேட்டு விண்ணப்பித்த மனுக்களை முறைப்படுத்தி பணிகள் தொடங்கப்படவுள்ளன. மாநகராட்சி பகுதியில் 954 சாலைகளும். புதிதாக 1887 தெரு விளக்குகள் அமைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள திருச்செந்தூர் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 3 ஜேசிபி வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக இரண்டு வாங்கப்பட்டுளளது. 5 ஜேசிபி இருப்பதால் இன்னும் கூடுதலாக சில பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும். மழைக் காலங்களில் நீர் தேங்காத வகையில் பாதிப்பு ஏதுவும் வராத நிலையில் பணிகளை மேற்கொண்டுள்ளோம். முள்ளக்காடு பகுதிகளில் நெகிழி கழிவுகளை பிளாஸ்டிக் பொருட்களை கால்வாயில் போடுகின்றனர். பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 36 நீரேற்று தொட்டிகள் மூலம் வல்லநாட்டிலிருந்து குடிநீர் வரபெற்று, மாநகராட்சியின் எல்லா பகுதிகளுக்கும் சீராக வழங்கி வருகிறோம். தெற்கு மண்டலத்தில் உள்ள நான்கு வாா்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் வழங்கப்படும். தினசாி தண்ணீர் வழங்கும் பட்சத்தில் டிஜிட்டல் மீட்டா் பொறுத்தப்படும். அதிகாலை 4 மணி முதல் 11 மணி வரை எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறது. இதை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனா் மேலும் மக்களின் கோிக்கைக்கு ஏற்ப, மாற்றம் செய்தும் வழங்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில்
பெறப்படும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கும், இங்கு வழங்கப்படும் கோாிக்கை மனுக்களுக்கும் விரைவான முறையில் தீா்வு காணப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் 60 வார்டுகளிலும் நடைபெறுகிறது . தமிழ்நாடு அரசின் 13 துறைகளின் கீழ் 43 சேவைகளை மக்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.
| அனைவரிடமும் பாரபட்சமின்றி பழகும் மேயர் |
கூட்டத்தில்அத்திமரப்பட்டிவிவசாயிகள சங்க.ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, பேசுகையில் தற்போது மேயராக இருக்கும் ஜெகன் பெரியசாமி, அனைவரிடமும் பாரபட்சமின்றி பழகுவதும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கோாிக்கையோடு தன்னை சந்திக்க வருபவா்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதும், பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வும் காண்கிறார். மேயர் ஜெகன் பெரியசாமி மேலும் பல உயா் பதவிகளுக்கு வரவேண்டும் என இந்த பகுதி விவசாய சங்கத்தினர் மற்றும் மக்களின் சாா்பில் மனதார பாராட்டுவதாக கூறினார்.
முகாமில் நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேற்பாா்வையாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் வைதேகி, சரவணகுமார், முத்துமாாி, முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், ராஜேந்திரன், வெற்றி செல்வன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், நடேசன் டேனியல், மைக்கேல் ராஜ், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமாா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

