விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ வழங்கினார்.
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மைதானத்தில் மரங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று 21.06.25 நடைபெற்ற வாக்கத்தான் நடைப் பயிற்ச்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக்குழுத்தலைவர்,ஜி.வி.மார்கண்டேயன், வழங்கி வாழ்த்தினார். 
இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் இம்மானுவேல், சூரங்குடி முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

