December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் என்.வேடப்பட்டியில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட மார்கண்டேயன் எம்.எல்.ஏ, அடிக்கல் நாட்டினார்


விளாத்திகுளம்,புதூர் ஊராட்சி ஒன்றியம், என்.வேடப்பட்டியில் நியாயவிலைக்கடை கட்டிடத்திற்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம், என்.வேடப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது என்.வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லகுமார், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், புதூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.