December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் தொகுதி கே.சுந்தரேஸ்வர புரம், லட்சுமி புரம் குளங்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார்

By,CN.அண்ணாதுரை

விளாத்திகுளம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளங்கள், ஏரிகள், கம்மாய் மற்றும் ஓடைகளை ஆய்வு செய்தும் கரைகள், மதகுகள் மற்றும் நீர் இருப்பு, நீர் வரத்தை கண்காணிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் பல்வேறு நீர் நிலைகளை துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்கள், மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் இருப்பு வைத்துக் கொள்ளவும் அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 16.10.24 இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கே.சுந்தரேஸ்வர புரம், புதூர் ஊராட்சி ஒன்றியம், லட்சுமிபுரம் உள்ளிட்ட ஊராட்சி குளங்களில் நீர் நிரம்பி வரும் நிலையில் மதகுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் போஸ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் பாண்டியன், கிளை பிரதிநிதி பால்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.