விளாத்திகுளம் புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் புதுப்பட்டி – தாப்பாத்தி சாலையில் பாலம் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க புதுப்பட்டி – தாப்பாத்தி சாலையிடையே, நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.60- கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெளவால் தொத்தி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், என். வேடப்பட்டி கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி, புதுப்பட்டி கிளைச் செயலாளர் ஐயப்பன், வாக்குச்சாவடி முகவர் வேலுச்சாமி, புதுப்பட்டி பவானி, ராமகிருஷ்ணன், திமுகவினர் புதுப்பட்டி பாரததேவி, என்.வேடப்பட்டி கண்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

