தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சவோியாா்புரம், விவேகானந்தன் நகா், சுடலையாபுரம், காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகா், குடிசை மாற்று வாாியம், ராம்தாஸ்நகா், ஆகிய பகுதி பொதுமக்களுக்கான முகாம் தூய சவோியாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தாா். பின்னர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய தீர்வு ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலா்கள் ஐகோாட் மகாராஜா, பானு, தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளர் சரவணக்குமாா், தெற்குமாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடா் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளா் ஸ்டாலின், ஓன்றிய அவைத் தலைவர் ஜோதிடா் முருகன், துணைச் செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மோி, கிளைச்செயலாளர்கள் ராயப்பன், அம்புரோஸ், பங்குதந்தை குழந்தைராஜன், கிராமநிர்வாக அலுவலா் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் கப்பிக்குளம்பாபு, அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

