November 28, 2025
#தூத்துக்குடி

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி, மேயர் ஜெகன் பொியசாமி 8 கி.மீ நடைபயணம்

By,CN.அண்ணாதுரை


தமிழக அரசின் சாா்பில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” விழிப்புணர்வு நடைபயிற்சி

பீச் ரோடு முத்துநகர் கடற்கரையிலிருந்து மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை, மாநகராட்சி சுகாதார துறை பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணமாக கடற்கரைசாலை, மாதா கோவில், விளையாட்டு மைதானம், தெற்கு காட்டன்ரோடு, வஉசி சாலை, விஇ சாலை, காய்கனிமாா்க்கெட் அண்ணாசிலை, புதிய மாநகராட்சி, பழைய பஸ்ஸ்டாண்ட், வஉசி சாலை, டபிள்யுஜி சாலை, பழைய மாநகராட்சி வழியாக மீண்டும் கடற்கரை சாலை வழியாக முத்துநகர் கடற்கரையை சென்றடைந்தது. 8.6 கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொண்டது குறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில்;

ஹெல்த் வாக் சாலை

தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் “நடப்போம் நலம் பெறுவோம்” 8 கி.மீட்டர் ஹெல்த் வாக் சாலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கடந்த 2023 ஏப்ரல் 11 அன்று காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தனர். அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரிலும் நடைபயணம் மேற்கொண்டார்

இந்நிலையில் மாநகராட்சி சாா்பில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் என ஓவ்வொரு மனிதருக்கும் உடல் ஆரோக்கியம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் இருந்த பழைய பூங்காக்கள் பலவற்றை விாிவுப்படுத்தி விளையாட்டு திடல் நடைபயிற்சி தளம் உருவாக்கி கொடுத்துள்ளோம் புதிதாக அமைக்கப்படுகின்ற பூங்காக்களில் கைப்பந்து, கால்பந்து, இறகுபந்து என பல்வேறு விளையாட்டுக்களுடன் கூடிய நடைபயிற்சி கட்டமைப்புகளை 60 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் செய்து கொடுத்து வருகிறோம்.

அதே நேரத்தில் பெண்களுக்கு என்று தனியாக நான்கு மண்டலத்திலும் மகளிர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக மேற்கு மண்டலம் வஉசி கல்லூாி அருகில் மகளிர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது சிறப்பான பராமாிப்புடன் பெண்கள் கவனித்து வருகின்றன. இந்நிலையில் எல்லோரும் நலம் பெற வேண்டும் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயிற்சியை மேற்கொண்டு எதிர்கால தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது பகுதியில் உள்ள பூங்காக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்

மக்களை தேடி மருத்துவம் மாநகராட்சி சுகாதாரதுறை இணைந்து மாநகாின் பல பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பாிசோதனை முகாம்கள் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேயர் ஜெகன் -நடப்போம் நலம் பெறுவோம்

நடைபயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டர் யாழினி, மாவட்ட இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், நகா்நல அலுவலர் சரோஜா, திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிராஜா, சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளா் வில்சன், வட்டச் செயலாளர் சி.என்.ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், முன்னாள் மாவட்ட அரசு ஊழியா் சங்க செயலாளர் வெங்கடேஷ், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.