December 1, 2025
#தூத்துக்குடி

குமாரகிரி ஊராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, சண்முகையா எம்எல்ஏ புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைத்தார்

தூத்துக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரகிரி ஊராட்சி செல்வம் சிட்டி நகர் பகுதியில் ரூ 10,45510 மதிப்பீட்டில் 110/22-கிவோ மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக சண்முகையா எம்எல்ஏ இயக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மின்வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்),சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹை கோர்ட் ராஜா, மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.