தூத்துக்குடியில் மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தயர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் 02.10.2024 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, திமுக பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மேகநாதன், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

