December 1, 2025
#அரசியல்

முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி-க்கு பெரியார் விருது வழங்கி கௌரவிப்பு

கரூர் மாவட்டம், கரூர் மாநகர புறவழிச்சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி பகுதியில்  (செப்டம்பர் 17) அன்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. கடுமையான மழையும் இருந்தபோதிலும், பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் விழாவில் கலந்துகொண்டனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விழா நுழைவு வாயிலில் இருந்து கையசைத்து வரவேற்ற தொண்டர்களை பார்வையிட்டு, மேடைக்கு வந்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

பெரியார் விருது;

இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கனிமொழி, தமது விருப்பமான பெரியார் விருதை பெறுவதே வாழ்க்கையின் கனவு என்று கூறி, அதை பெற்றதற்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைமைக்கு நன்றியை தெரிவித்தார்.

தொடர்ந்து, கனிமொழி, “கொட்டும் மழையிலும் இங்கு நிற்கும் உடன்பிறப்புகளை பார்க்கும்போது, ‘இந்த படை போதுமா?’ என தோன்றுகிறது. எந்த தேர்தலும், எந்த எதிரிகளும் இருந்தாலும், நமது பாரம்பரியத்தை நிலைநாட்டி வெற்றி பெறுவோம். திமுகவிற்கு வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழியைப் புகழ்ந்து,

அவரைப் பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி, திராவிட இயக்கத்தின் திருமகளாக, பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்” என கூறினார்.

மேலும், பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 இலட்சத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி வழங்கியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

விழா திமுக கட்சி முன்னேற்றங்களை மற்றும் எதிர்கால தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

முப்பெரும் விழா ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்த மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ,வை முதலமைச்சர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.