December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம், விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஜார்ஜ் ஆசீர்வாதம் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் நாகப்பன் விளக்க உரையாற்றினார்.மாநில செயலாளர் வெயில்முத்து சிறப்புரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் கருப்பசாமி,மாநிலத் துணைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார். மேலும் வட்ட துணைத் தலைவர் சுப்பையா, துணைச்செயலாளர் முத்துப்பாண்டி,இணை செயலாளர் குமரவேல்,கௌரவ ஆலோசகர் முனியசாமி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.