தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டதில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், ஆகியோர் கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
“ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் வௌ்ளத்தால் மணல் வயல் பகுதியில் அதிகமாக வந்துள்ளதால் விவசாயிகள் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர்.
ஆகவே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை விவசாயிகளின் நலன் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும். ஸ்ரீமுலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோட்டில் விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த கரை ரோட்டில் இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கரை ரோட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் சாா்பாக மாவட்ட கலெக்டா் லட்சுமிபதியிடம் அளித்துள்ள கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளனர்.

