“வேட்டையாட வரும் சிங்கம் அல்ல… வெறும் வேடிக்கை காட்ட வரும் சிங்கம்!”
ராமநாதபுரம், பரமக்குடி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு சீமான்,
“மக்களை சந்திக்கிறேன் என்பதுதான் அரசியல். ரோடு ஷோ நடத்தி கூட்டம் கூடி பேசுவது இல்லை. மக்களோடு நின்று மக்களுக்காக போராடுவதுதான் உண்மையான சந்திப்பு. நான் எந்த போராட்டத்திலும் பின்தங்கியதில்லை.
விஜய் சொல்வது போல, ‘மக்கள் என்னை பார்ப்பதற்காக நான் வரேன்’ என்பதுதான் உண்மை. அது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல… வெறும் வேடிக்கை காட்ட வரும் சிங்கம்!” என நக்கலாகக் கூறினார்.

