தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
மாநகராட்சி 39 வது வார்டு தெப்பக்குளம் பகுதியைச் சுற்றி மக்கள் நடைமேடை மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் இரண்டு மின்மாற்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் எதிரே அமைந்து உள்ளது. திருவிழாவிற்க்கு வரக்கூடிய பக்தர்களுக்கும், கோவிலுக்கு சாமி கும்பிட வரக்கூடிய பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. கோயிலுக்கு எதிராக இருக்கக்கூடிய மின்மாற்றிகளை எடுத்து அந்தப் பகுதியை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகன நிறுத்துவதற்கு வசதி செய்து கொடுத்து தரவும். மற்றும் அந்த மின்மாற்றிகளை தெப்பக்குளம் கிழக்கு பகுதியில் மாற்றவும் மேயர் ஜெகன் பொியசாமியிடம் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனா். இந்து முன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, மாதவன், கவி சண்முகம், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்

