இந்தியாவில் பொருள் மற்றும் சேவைக் கட்டணம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதால் கார் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.
🔹 சிறிய கார்கள்
எந்த கார்கள்?
பெட்ரோல் – என்ஜின் 1200 cc வரை
டீசல் – என்ஜின் 1500 cc வரை
நீளம் – 4 மீட்டர் வரை வரி மாற்றம்: ஜிஎஸ்டி 28% இருந்தது → இப்போது 18%
இதனால் ஒரு கார் வாங்கும் போது ₹35,000 முதல் ₹1.3 லட்சம் வரை சேமிக்கலாம்.
🔹 பெரிய கார்கள் / எஸ்யூவி / எம்பிவி முன்பு: ஜிஎஸ்டி 28% + கூடுதல் வரி (cess) 22% = மொத்தம் 50% வரை வரி இப்போது: கூடுதல் வரி (cess) நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி மட்டும் 40%
இதனால் பெரிய கார்கள், எஸ்யூவிகள், எம்பிவி வாங்கும்போது ₹3.48 லட்சம் வரை குறைவு.
செப்டம்பர் 22 முதல் புதிய விலைகள் அமலுக்கு வரும்.
கார் வாங்க ஆசைப்பட்டு விலை பார்த்ததும் தள்ளிப் போட்டு வைத்திருந்தவர்களுக்கு இப்போ ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது!
இந்திய அரசு ஜிஎஸ்டி (வரி) குறைத்ததின் விளைவாக, சிறிய கார்கள் ஆயிரங்களில்… பெரிய சொகுசு (லக்ஷரி ) கார்கள் கூட லட்சங்களில் குறைந்துவிட்டன. செப்டம்பர் 22 முதல் புதிய விலைகள் அமலுக்கு வந்துள்ளதால், வரவிருக்கும் பண்டிகை சீசனில் குடும்பத்துடன் கார் வாங்க சிறந்த சந்தர்ப்பம் இதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கார் பிராண்ட் வாரியாக விலை குறைவு & நிபுணர் கருத்துகள்;
🔹எவ்வளவு குறைவு?
சிறிய கார்கள் – 35 ஆயிரம் முதல் 1 லட்சம் 30 ஆயிரம் வரை குறைவு
நடுத்தர கார்கள் / எஸ்யூவிகள் – 1 லட்சம் முதல் 3 லட்சம் 50 ஆயிரம் வரை குறைவு
பெரிய லக்ஷரி கார்கள் – 7 லட்சம் முதல் 9 லட்சம் வரை குறைவு.
🔹 கார் நிறுவன வாரியான விலை குறைப்பு
டாடா மோட்டார்ஸ்
டியாகோ – ₹75,000 குறைவு
ஆல்ட்ரோஸ் – ₹1 லட்சம் 10 ஆயிரம் குறைவு
நெக்சான் – ₹1 லட்சம் 55 ஆயிரம் குறைவு
சஃபாரி – ₹1 லட்சம் 45 ஆயிரம் குறைவு
மஹிந்திரா
போலேரோ – ₹1 லட்சம் 27 ஆயிரம் குறைவு
தார் – ₹1 லட்சம் 35 ஆயிரம் வரை குறைவு
ஸ்கார்பியோ – ₹1 லட்சம் 45 ஆயிரம் குறைவு
எக்ஸ்யூவி 700 – ₹1 லட்சம் 43 ஆயிரம் குறைவு
ஹூண்டாய்
ஐ10 நியோஸ் – ₹73,000 குறைவு
எக்ஸ்டர் – ₹89,000 குறைவு
வென்யூ – ₹1 லட்சம் 19 ஆயிரம் குறைவு
க்ரெட்டா – ₹72,000 குறைவு
டுச்சன் – ₹2 லட்சம் 40 ஆயிரம் குறைவு
டொயோட்டா
இனோவா கிரிஸ்டா – ₹1 லட்சம் 80 ஆயிரம் குறைவு
இனோவா ஹைக்ராஸ் – ₹1 லட்சம் 15 ஆயிரம் குறைவு
ஃபார்ச்சூனர் – ₹3 லட்சம் 49 ஆயிரம் குறைவு
ஹைலக்ஸ் – ₹2 லட்சம் 52 ஆயிரம் குறைவு
கியா
சோனெட் – ₹1 லட்சம் 64 ஆயிரம் குறைவு
செல்டோஸ் – ₹75,000 குறைவு
கார்னிவல் – ₹4 லட்சம் 48 ஆயிரம் குறைவு
ரெனால்ட்
க்விட், டிரைபர், கைகர் – ₹96,000 வரை குறைவு
ஆடி (லக்ஷரி கார்கள்)
A4 – ₹2 லட்சம் 60 ஆயிரம் குறைவு
Q7 – ₹6 லட்சம் குறைவு
Q8 – ₹7 லட்சம் 80 ஆயிரம் குறைவு
சிறிய கார்கள் – ₹35,000 முதல் ₹1.3 லட்சம் வரை குறைவு, மத்திய தர கார்கள் & எஸ்யூவிகள் – ₹1 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை குறைவு, லக்ஷரி கார்கள் – அதிகபட்சம் ₹7–9 லட்சம் வரை குறைவு.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகையாக அமையப் போகிறது. “கார் வாங்க நினைத்திருந்தவர்கள் இப்போது தான் சரியான நேரம்”
👉 “லக்ஷரி கார்கள் சந்தையில், இத்தகைய விலை குறைப்பு அரிது. அதிக வருமானம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது வாங்குவது மிகச்சிறந்த நேரம்” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

