| கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் கிராமத்தில் ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 50-வது இலவச மருத்துவ முகாம் நடந்தது. |
திருவனந்தபுரம் டாக்டர் சோமெர்வெல் நினைவு மருத்துவ மேலாண்மை கல்லூரியின் முதல்வர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார்.பொருளாளர் திருவேங்கட ராமானுஜம் முகாமை தொடங்கி வைத்தார். இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள், நுரையீரல் செயல் திறன் பரிசோதனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனைகள், பல் பரிசோதனை, பொது மருத்துவம், இலவச செவித்திறன் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது.இந்த முகாமில்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 325 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

