December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் வழங்கினார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிாிவு இணைச்செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி கொறாடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்திக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.