தூத்துக்குடி ஆக-9 வடபாகம் கோயில்பிள்ளைவிளை 6 வது வார்டுக்குட்பட்ட
ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு .
நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
விழாவில் தெற்கு மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர் அருண்குமார், வட்ட நிர்வாகி அய்யப்பன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், பேச்சியப்பன், மற்றும் சேகர், பொண்ணு கவுண்டர், முருகன், கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் வட்ட செயலாளர்கள் அம்பை முருகன், பாக்யராஜ், பாலமுருகன், பெருமாள் தாய், மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்..

