| “விவசாய நிலம் விவசாயத்திற்கே, கரிசல் மண் கந்தக பூமியாக வேண்டாம்” முத்துலாபுரத்தில் பட்டாசு ஆலையை அகற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்,:கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் தகவல் |
தூத்துக்குடி மாவட்டம், முத்துலாபுரம்: மனித உயிர்களை காவு வாங்கக் காத்திருக்கும் வெடி மருந்து மற்றும் பட்டாசு ஆலையை எதிர்த்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
02-09-2025 இன்று காலை 10.00 மணிக்கு வி.பி. சுப்புராம் தலைமையில் மு. கோட்டூர் விலக்கு (தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் நடைபெற உள்ளது. விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு, பட்டாசு ஆலையை நிரந்தரமாக இங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம். வாருங்கள் “விவசாய நிலம் விவசாயத்திற்கே, கரிசல் மண் கந்தக பூமியாக வேண்டாம்” என்பது நமது கோரிக்கை.
எட்டையபுரம் வட்டம், புதூர் வட்டாரம், முத்துலாபுரம், வீரப்பட்டி, தோல்மலைப்பட்டி, இனாம் அருணாசலபுரம், கருப்பூர், சக்கிலிபட்டி, கீழ்நாட்டுக் குறிச்சி, அயன் ராஜாபட்டி, மாசார்பட்டி, மேல நம்பிபுரம், அயன் வடமலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, மாவில்பட்டி, மேலக்கரந்தை போன்ற கிராமங்களில் பல தலைமுறையாக விவசாயம் நடைபெற்று வருகிறது.
அருகாமையில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பல வருடங்களாக பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தாலும், அவற்றில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளமை வரலாற்று கண்ணோட்டமாக உள்ளது. இதன் பயத்தை காரணமாக கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக எட்டையபுரம் வட்டார கிராமங்களில் புதிய பட்டாசு ஆலைகள் அனுமதி பெற்றுள்ளனர் பட்டாசு ஆலை அதிபர்கள்
சமீபத்திய சம்பவம்:29.08.2025 அன்று மதியம், இனாம் அருணாசலபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு, முதன்முதலாக மனித உயிரைக் காவு வாங்கியுள்ளது. அச்சுறுத்தலால் பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு வீடுகள் குலுங்கிய நிலையில், பட்டாசு உற்பத்தி தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இந்த பட்டாசு ஆலை வைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது..? விதிமுறைகளை எப்படி காற்றில் பறக்க விட்டார்கள்.
விவசாயிகளின் கோரிக்கை:
- எட்டையபுரம் வட்டம் மற்றும் புதூர் வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக மூடு.
- வெடி மருந்து மற்றும் பட்டாசு ஆலைகளுக்கான உரிமத்தை நிரந்தமாக இரத்து செய்க.
- விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார் மேலும் பொதுமக்களிடம், “வரும் காலங்களில் ஏற்படவுள்ள பேராபத்தை தடுக்க மக்கள் அனைவரும் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

