December 1, 2025
#தூத்துக்குடி

இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் விழா; கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செய்தனர்

தூத்துக்குடி,பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய வரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ராவ் பகதூர் “திராவிட மணி” இரட்டை மலை சீனிவாசன் 166 வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 07.07.25 இன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ படத்திற்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர். 

நிகழச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சுசீ ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, ஆதிதிராவிடர் மாவட்ட நலக்குழு தலைவர் சி.பெருமாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞரணி குபேர் இளம்பருதி, மகளிரணி கவிதா தேவி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், இளைஞரணி அருண் சுந்தர், அயலக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் மூக்கையா, செல்வராஜ், பாலு, சிங்கராஜ், பொன்ராஜ், செல்வராஜ், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி , ஜெயசீலி, விஜயகுமார், ராஜதுரை, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் இளைஞரணி ஐ.ரவி, சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், வழக்கறிஞர்கள் ரூபராஜா, மாலாதேவி, மாணவரணி கிங் பாலா, சத்யா, பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, சந்தன முனீஸ்வரன், வட்ட பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.