December 1, 2025
#விளாத்திகுளம்

வடகிழக்கு பருவமழை….. விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில் துறை அதிகாரிகள் ஆலோசனை

பூமா.பிரபு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுத்தும் பணிகள் குறித்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்  நடந்தது.

ஆலோசனை கூட்டத்தில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேசுகையில்., அனைத்து பொதுப்பணித்துறை குளங்களின் மதகுகளை ஆய்வு செய்திடவும்,முகாம்கள்,மணல் மூட்டைகள்,ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார்,  மேலும் மின்சார துறையில் மின் வினியோகம் தடையின்றி வழங்கிடவும் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் எட்டையாபுரம் தாசில்தார் சங்கரநாராயணன், கயத்தார் தாசில்தார் ராகவன்,  விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர்  செந்தில்குமார், கயத்தார் உதவி செயற்பொறியாளர் முனியசாமி,  நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சுபாஷ், நீர்வளத்துறை உதவி  செயற்பொறியாளர் முருகன், விளாத்திகுளம் டவுன் பஞ்., செயல் அலுவலர்(பொறுப்பு) செந்தில்குமார், எட்டையாபுரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் மகாராஜன், எட்டையாபுரம்  நீர்வளத்துறை உதவி பொறியாளர் நிவேதா புதூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுபலட்சுமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.