December 1, 2025
#தூத்துக்குடி

எதிாி உதிாி கட்சிகளுக்கு 2026 தோ்தலில் திமுக பாடம் புகட்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் அவைத் தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் – மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரை ஆற்றி பேசுகையில்;

தமிழகம் தலைநிமிா்ந்து இருப்பதற்கு காரணமான கலைஞாின் 102வது பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் நம்பர் ஒன் ஆட்சி நடைபெற்று வருகிறது. கலைஞர் எப்படி கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதே வழியில் நம்முடைய தளபதியாரும் உறுதியான கொள்கையோடு தமிழக மக்களுக்காக பணியாற்றுகிறார்,

1949ல் இதே தூத்துக்குடியில் கலைஞர் கொடியேற்றி யுள்ளார் மிசா, மொழிப்போர் தியாகிகள் அதிகம் நிறைந்த ஊராகும். திமுகவை பொறுத்தவரை ஜாதி மத வேறுபாடு கிடையாது. நாம் எல்லோரும் திமுக குடும்பம் நாம் அனைவரும் திமுக உடன் பிறப்புகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயலாற்றுகிறோம்.

30 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளராக இருந்து திமுகவின் சோதனை காலத்தில் தென்னகத்தின் நம்பிக்கையாக கலைஞாின் முரட்டு பக்தராக இருந்து பணியாற்றிய எனது தந்தையார் என்.பெரியசாமி நினைவு நாள் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.

எல்லோரும் இணைந்து நினைவு தினத்தை அனுசாிப்போம். 2026 தோ்தல் நமக்கு முக்கியம் உங்களை நம்பிதான் முதலமைச்சர் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறியுள்ளார்அதற்கேற்றாற்போல் நாம் சுறுசுறுப்புடன் கவனமாக பணியாற்ற வேண்டும்.திமுக ஆட்சியை யாரும் குறை சொல்லமுடியாது ஆனால் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக எதிா்கட்சிகளும் சில உதிாி கட்சிகளும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் குறைசொல்லி வருகின்றனர்.அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பொிய பாடம் புகட்டுவோம்.

தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து இந்தியாவிற்கே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என ஓன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு பாராட்டி வருகிறது.

நமக்குள் கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். பின் வாசல் வழியாக ஒன்றிய அரசு பல்வேறு சட்டங்கள் மூலமாக தேவையற்ற வைகளை கட்டாயமாக திணித்து வருகிறது. அது தமிழ்நாட்டிற்கும் தமிழா்கள் நலனிற்கும் எதிராக இருப்பதால் அதை திமுக எதிர்க்கிறது.

சட்ட போராட்டம் மூலமும், கொள்கை உறுதியுடன் முதலமைச்சர் வென்று வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை கூடியுள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தோ்வு தமிழகத்தில் வரவில்லை. அவர் மறைவிற்கு பின் எதற்கெடுத்தாலும் தலையாட்டும் எடப்பாடி பழனிச்சாமி அதை கொண்டு வந்தாா். அதே போல் உதய்மின் திட்டம், ஓரே நாடு ஓரே தோ்தல் என கையெழுத்திட்டு துரோகத்திற்கு துணை போனவா் இன்று புதுசா கட்டிக்கிட்ட ஜோடி போல அதிமுக பாஜக உலா வருகின்றனர்

ஆனால் இந்த கூட்டணியை கடந்த தொடர் தோ்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நலன் தமிழா்கள் நலன் என்று எல்லா வற்றையும் காப்பாற்றும் ஓரே தலைவராகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் செயல்படுகிறார்

ஓன்றைகோடி உறுப்பினா்களை கட்டுக்கோப்பாக வழிநடத்தும் தலைவருக்கு பின்னால் நாம் அணிவகுத்து வெற்றி இலக்கை அடைவோம் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

கூட்டத்தில் மறைந்த கழக முன்னோடிகள் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • மாநிலங்களின் உாிமைக்காக குரல்கொடுத்து மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும்,
  • நான்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி,க்கும் நன்றி தொிவித்தும்,
  • பகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது.
  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை அனைத்து வார்டுகளிலும் கொண்டாடுவது.
  • வார்டுகள் தோறும் மாவட்ட செயலாளர் தலைமையில் குறைகேட்பு முகாம் நடத்தப்பட வேண்டும்.
  • மறைந்த என்.பொியசாமியின் 8ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தி திமுகவினா் அனைவரும் கலந்து கொள்ளவது.

   உள்பட 6 தீர்மானங்கள்     நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமாா், மேகநாதன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அபிராமிநாதன், கவிதாதேவி, குபேர் இளம்பருதி, அசோக், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், மீனவரணி ஜேசையா, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாநகர அணி அமைப்பாளர்கள் கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜெயக்கணி, ஆனந்தசேகா். முருகஇசக்கி, சாரதி, டைகர் வினோத், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், மரைக்காயா், மாநகர துணை அமைப்பாளர்கள் ஐ.ரவி, மகேஸ்வரன்சிங், பிக் அப் தனபாலன், சத்யா, கிங் பாலா, குமரன், வினோத், மற்றும் வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி அணி அமைப்பாளர்கள் மற்றும் பகுதி பிரதிநிதிகள், வட்டப் பிரதிநிதிகள் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.