திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளின் திமுக பாக முகவர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்.பியும் கழகத் துணைப் பொதுச் செயலாளர்,தென் மண்டல பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான, கே.என்.நேரு,மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன் கான், முன்னாள் சங்கரன்கோவில் நாகர் மன்ற தலைவர் முத்து செல்வி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வசந்தம் ஜெயக்குமார் உட்பட நகர பேரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

